முக்கிய முடிவில் மாற்றம் காணுமா திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம்.?!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானமாக பெறப்பட்ட நிலங்களை விற்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு பக்தர்கள் தானமாக நிலங்களை கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்பட்ட நிலங்களை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
இந்த முடிவை பரிசீலனை செய்யும் படியும், அதுவரையில் நிலம் விற்கும் முடிவை கைவிடும்படியும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத குருக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தலை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்த்ர்கள் தானம் செய்த நிலத்தில் கோவில் கட்டுவது, ஆன்மீக பிரச்சாரத்திற்கு உபயோகபடுத்துவது மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கும் படியும் அதுவரையில் நிலத்தை விற்கும் முடிவை தள்ளிவைக்குமாறும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.