மீண்டும் பாஜக… தமிழகத்தில் திமுக.! வெளியான கருத்துக்கணிப்பு நிலவரம்…
மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி உள்ளன.
தேர்தல் ஆணையம் விதித்த தடை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மேலும், மாலை 6.30 மணி முதல் கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், Times Now வெளியிட்டுள்ள பிந்தைய கருத்து கணிப்பின் படி, இந்திய அளவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 359 இடங்ளையும், காங்கிரஸ் ஒன்றிணைத்த I.N.D.I.A கூட்டணி 154 இடங்களை கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 30 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக 23 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 16 தொகுதிகளிலும், அதிமுக 0 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.