நாளைய சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் இதோ உங்களுக்காக மறக்காமல் கண்டு ரசியுங்கள்…
- இந்திய நேரப்படி சூரிய கிரகணம் தொடங்கி, முடியும் நேரம் வரை இந்த குறிப்பில் காணலாம். இந்திய்யாவில் சில இடங்களில் முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம், சில இடங்களில் வளைய கிரகணமும் ஏர்படுவதை காண முடியும்.
- ஒரே பகுதிகளில் சில இடங்களில் கிரகணத்தை சில விநாடிகளும், சில இடங்களில் சில நிமிடங்களும் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் 26 டிசம்பர், 07:59:53 ஆகும், இதில்
முழு கிரகணத்தைக் காண முதல் இடம் 26 டிசம்பர் 09.04.33 ஆகும். இதேபோல் சூரிய கிரகணம் உச்சம் பெரும் நேரம் 26 டிசம்பர் 10.47.46 மணி ஆகும். முழு சூரிய கிரகணம் முடிவை காணக்கூடிய நேரம் 26 டிசம்பர் 12.30.55 மணி ஆகும். இறுதியாக பகுதிநேர சூரிய கிரகன முடிவை காணக்கூடிய நேரம் 26 டிசம்பர் 12.35.40 மணி ஆகும்.
இந்த அற்புத நிகழ்வை சோலார் ஃபில்டர் எனும் சூரிய வடிகட்டி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்க்க கூடிய கண்ணாடியைப் பயன்படுத்தி ( வெல்டிங் கடைகளில் பயன்படும் கண்ணாடி) சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். இந்த கண்ணாடி சூரிய ஒளியில் ஒரு லட்சத்தில் ஒரு பதியை மட்டும் தான் அனுப்பும். அதில் சாதாரணமாக பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் சூரியனைப் பார்த்தால் சூரிய கிரகண நிகழ்வு நன்றாக தெரியும். எனவே இந்த சூரிய கிரகணத்தை அனைவரும் கண்டு ரசிக்க மறக்க வேண்டாம்.