சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் அரசு தடைவிதிக்க உள்ளது என்ற ஒரு தகவல் பரவி வந்தது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவல் :இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கின்ற வகையில்சீன ஆப்களுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் பரிந்துரைத்தாக தகவல் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக பலகட்ட ஆலோசனைகளை நடந்திய மத்திய அரசு சீனாவின் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி, ‘டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ மற்றும் ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்’ போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசால் தடைவிதிக்கப்பட்டதால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறியடித்த டிக்டாக் ஆப் நிறுவனம் இந்திய அரசிற்கு ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது
டிக்டாக் நிறுவனம் தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் நாங்கள் பகிர்ந்ததில்லை என்று இந்திய அரசிற்கு அறிக்கையில் கதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…