பிரபலமாக உலக நாடுகளில் எல்லாம் இயங்கி வந்த டிக்டாக் செயலி தனது தலைமை இடமான சீனாவை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக முழுவதும் டிக்டாக் செயலி அதிக பயனார்களை கொண்டு வலம் வந்தது சீனாவை தலைமையிடமாக கொண்டு செயலப்பட்டு வரும் ஒரு சீன நிறுவனமே டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வந்தது.
சமீபத்தில் எல்லையில் அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை நியாயமின்றி கொன்றது சீனா இதனால் கடும் எதிர்ப்பானது அந்நாட்டிற்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமில்லாமல் சீன பொருட்கள் மீதும் எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில் தான் இந்தியாவுடன் லடாக் பகுதயில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவே அவற்றை இரவோடு இரவாக தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் உலக முழுவதும் பரவி உயிர்களை கொன்று குடித்து வரும் கொடூர கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இவ்வாறு கடும் எதிர்ப்பானது சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு அந்நாட்டில் தடை விதித்து விட்டது.இதனை அதிகாரப்பூர்வமாகவே அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எல்லை நாடுகள் மட்டுமின்றி சர்ச்சையாக உள்ள ஹாங்காங்கிலும் சீனா கடுமயைான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அங்கும் டிக் டாக் நிறுவனம் தனது நடவடிக்கையை வாபஸ் பெற்றுள்ளது
லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன்,டப்ளின், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் ஏற்கனவே டிக் டாக் நிறுவனம் அலுவலகங்களை கொண்டு உள்ளது.
இந்தியாவிலும் மற்றும் அமெரிக்காலும் தடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.இதனால் தன் மீதான களங்கத்தை மாற்றும் நடவடிக்கையாக அதன் தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது குறித்தும்புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது குறித்தும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒரு தளத்தை உருவாக்கவும் , அதன் மூலம் பயனாளர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் சீன நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…