டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் முழு நேரமும் இதனை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் டிக் டாக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் தாண்டி சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்த டிக் டாக்கில் சாகசம் என்ற பெயரில், பல ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கி இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கிறது.
இந்நிலையில் அந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளைஞர் கீழே விழுந்து கிட்டத்தட்ட ரயிலின் சக்கரத்தின் அடியில் இழுத்துச் செல்லப்படுவதை பார்க்க முடிகிறது. பின்னர் ரயில் நிற்காமல் சென்றுகொண்டிருக்க அந்த இளைஞர் சக்கரத்தின் பகுதியிலிருந்து சற்று ஒதுங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது ஸ்டண்டுக்காக அவர் இப்படி செய்தாக இணையத்தில் கூறப்படுகிறது. இந்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் பிப்ரவரி 18 பகிர்ந்துள்ளது. அதில் இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், இவரைப் பார்த்து மற்றவர்கள் இதுபோன்று முயற்சியில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது.
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…