ஓடும் ரயிலில் டிக்டாக் அட்டூழியம்.! அரண்டுபோன பயணிகள்.! எச்சரித்த ரயில்வே துறை.! இதோ வீடியோ.!

Default Image
  • ஓடும் ரயிலிலிருந்து டிக்டாக் சாகசம் செய்த இளைஞர் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கும் அளவுக்கு கொடுமையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் முழு நேரமும் இதனை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் டிக் டாக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் தாண்டி சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்த டிக் டாக்கில் சாகசம் என்ற பெயரில், பல ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கி இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கிறது.

இந்நிலையில் அந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளைஞர் கீழே விழுந்து கிட்டத்தட்ட ரயிலின் சக்கரத்தின் அடியில் இழுத்துச் செல்லப்படுவதை பார்க்க முடிகிறது. பின்னர் ரயில் நிற்காமல் சென்றுகொண்டிருக்க அந்த இளைஞர் சக்கரத்தின் பகுதியிலிருந்து சற்று ஒதுங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது ஸ்டண்டுக்காக அவர் இப்படி செய்தாக இணையத்தில் கூறப்படுகிறது. இந்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் பிப்ரவரி 18 பகிர்ந்துள்ளது. அதில் இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், இவரைப் பார்த்து மற்றவர்கள் இதுபோன்று முயற்சியில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்