மீண்டும் ஒரு உயிரை பறித்தது டிக்-டாக் மோகம்! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்!

Default Image

உலகம் முழுவதும் பெரும்பாலான இளம் வயதினர் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் கவரக்கூடிய ஒரு செயலியாக டிக்டாக் செயலி உள்ளது. இதன் மூலம் தனக்கு பிடித்த நடிகர்களின் டயலாக்கையோ அல்லது தனது கருத்துக்களையோ பேசி இதில் பதிவிட்டு வருகின்றனர். இதில் தொடர்ந்து பதிவிட்டு வருபவர்கள் டிக்டாக்கில் மூழ்கிவிடுகின்றனர். பார்வையாளர்களை கவர அபாயகரமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆதலால், இந்த செயலியை தடை செய்ய பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கள் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற 22வயது இளைஞன் தனது நண்பர்கள் கங்கஜலம் மற்றும் மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகிலுள்ள கப்பலாகு தடுப்பணைக்கு சென்றுள்ளார். அங்கு மீன் பிடித்து விளையாடியுள்ளனர்.

பின்னர், அவர்கள் அந்த தடுப்பணையில் நின்று டிக்டாக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பணையில் வெள்ளம் வந்ததால் மூவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்திலிருந்து, கங்கஜாலம் மற்றும் மனோஜ் மட்டும் தப்பித்து விட்டனர். தினேஷ் ஆற்றில் மூழ்கினார்.

பின்னர், அவரது உடல் இரண்டு நாள் கழித்து அழுகிய நிலையில் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. டிக் டோக் மோகத்தால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்