ஓடும் ரயிலில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்.. தாயை காப்பாற்ற மகனின் அசாத்திய தைரியம்.!
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் சிக்கியத் தாயை காப்பாற்றிய சிறுவனின் தைரியமானது வியப்பூட்டும் வகையில் இருந்தது.
கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடைமேடையை அடைய முயற்சித்தபோது, ஓடும் ரயிலில் சிக்கிய தாயை காப்பற்றிய சிறுவனின் தைரியமான செயல் அனைவரையும் வியப்படைய வைத்தது.
இந்த சம்பவத்தின் விடியோவானது இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், செவ்வாய்க்கிழமை மாலை கல்புர்கி ரயில்நிலையத்தில் ரயிலுக்காக தாயும் மகனும் காத்துக்கொண்டிருந்தனர்.
பிளாட்பாரத்தில் இருந்து இறங்கிய அந்தப் பெண், ரயில் தண்டவாளத்தைக் கடந்து வேறு நடைமேடைக்கு வருவதற்கு குறுக்குவழியில் முயன்றபோது சிறுவன் தன் தாய்க்கு அருகில் சரக்கு ரயில் வருவதைக் கண்டான். உடனடியாக ஆபத்தை உணர்ந்த மகன், தன் தாயை பிடித்து தன்பக்கம் இழுத்ததில் இருவரும் தப்பினர்.
Source: @tv9kannada @SWRRLY @GMSWR @RailMinIndia @AshwiniVaishnaw seriously dono what’s wrng with thse people! Do thy have any intention to perform stunts or they want to be in Guinness record books? Crossing on tracks is prohibited and still they do this. Lst nyt at kalburgi pic.twitter.com/FEPnDPB4OV
— Deepak (@Deepak159006) December 7, 2022