மனைவியை கொலை செய்து டிபன் பாக்ஸில் அடைத்த கணவன் ! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

தனது மனைவியை கொலை செய்த உடலை 300 துண்டுகளாக நறுக்கி டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதா என்பவர் தான் கடந்த 2013ம்ஆண்டு தனது மனைவி உஷாஸ்ரீ சமலை கொலை செய்தார்.கொலையை மறைப்பதற்காக அவரது மனைவியினுடைய உடலை 300 துண்டுகளாக பிஷ்பிஷாக நறுக்கி 22 சின்ன டிபன் பாக்ஸ்களி அடைத்து அதை அவரது வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.
மேலும் நறுக்கிய உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமால் இருப்பதற்காக பினாயிலையும் ஊற்றி உள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் உபகரணங்கள்,கத்திரிக்கோல், கத்தி, மூலமாக மனைவியினுடைய உடலை 300 துண்டுகளாகவும் நறுக்கி உள்ளார் என்ற விசாரனையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட உஷாஸ்ரீ சமலின் குழந்தைகள் வெளிநாட்டிலிருந்து பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் உஷாஸ்ரீ சமலின் சகோதரர் ரஞ்சனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து உஷாஸ்ரீ வீட்டிற்கு அவருடைய சகோதரர் ரஞ்சன் சென்ற போது தான் உஷாஸ்ரீ கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.இக்கொலை தொடர்பாக அவருடைய கணவர் சோம்நாத் பரிதா கைது செய்யப்பட்டார் மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது சுமார் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குர்தா மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கியது. அதில் 78 வயதான பரிதாவிற்கு கொலை மற்றும் ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் ஆயுள்தண்டனையும் மற்றும் 50,000ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025