ஆதார் இணைக்காமல் டிக்கெட் முன்பதிவு;வரம்பு உயர்வு – இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி,இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ்(செயலி) ஆகியவற்றின் மூலமாக ஆதாரை இணைக்காமல் ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,மாறாக ஆதார் இணைக்கப்பட்ட நிலையில்,ஒரு பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,இதற்கான நிபந்தனை என்னவென்றால்,பயனர் ஐடி ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது வரை,ஆதார் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்,மேலும் ஆதார் இணைத்த பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.இந்நிலையில், ரயில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவிற்கான வரம்பை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது.