டிக் டாக் அதிரடி அறிவிப்பு: ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு.!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் அவர்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதன்படி டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
In the fight against the spread of COVID-19, we are extending support by donating Rs. 100 Crore towards 400,000 hazmat medical protective suits and 200,000 masks to doctors and supporting medical staff. #TikTokForGoodhttps://t.co/H8WeeFl3ei pic.twitter.com/3P7xnPdqXq
— TikTok India (@TikTok_IN) April 1, 2020
இதையடுத்து அதானி குழுமம் ரூ.100 கோடி, நடிகர் அக்ஷ்ய குமார் ரூ.25 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி மற்றும் பிசிசிஐ ரூ.51 கோடி என பிரதமரின் பொதுநிதிக்கு வழங்கியுள்ளனர். இந்நிலையில், பிரபல பொழுதுபோக்கு டிக் டாக் நிறுவனம், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள டிக் டாக் நிறுவனம், 20,675 பாதுகாப்பு உபகரணங்கள் வந்து விட்டதாகவும், வரும் சனிக்கிழமைக்குள் 1,80,375 உபகரணங்கள் வந்துவிடும் எனவும், மீதமுள்ள 2 லட்சம் உபகரணங்கள் விரைவில் வரும் எனவும் தெரிவித்துள்ளது.