மூன்று வருட முகநூல் காதல் – நேரில் வரச்சொல்லி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற காதலன்!
முகநூலில் மூன்று வருடமாக காதலித்து விட்டு நேரில் வரச் சொல்லி காதலியிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற காதலன் கைது.
ஜார்க்கண்டில் வசித்து வரக்கூடிய ஒரு இளம் வயதுடைய பெண்மணி ஒருவரும் அபிஷேக் தாக்கூர் எனும் ஒரு இளைஞரும் பேஸ்புக் மூலமாக நண்பர்களாகி உள்ளனர். இருவருமே ஜார்கண்டில் வசித்து வந்ததால் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பெண்மணி வேலைக்காக ஜார்கண்டில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். இருந்தாலும் இருவரும் பேஸ்புக் மூலமாக தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துள்ளனர். இதன் பின் இவர்கள் இருவரும் தன்னிச்சையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேற நினைத்துள்ளானர். எனவே அந்த பெண் தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் ஒரு பையுடன் வெளியில் வந்துள்ளார்.
அப்பொழுது அவரது காதலனுடன் பாட்னா வரை சென்றுள்ளார். பாட்னாவை கடந்த பின்பு அவரது காதலன் அந்தப் பெண்மணியை அவனது வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் காட்டாமல் இருந்துள்ளார். அதன்பின் அந்த பெண்மணி வைத்திருந்த ஒன்றரை லட்சம் பணம் மற்றும் அவரிடமிருந்து நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர். மேலும் அப்பெண்மணி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அபிஷேக் தாக்கூர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.