விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்.!
விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாய் அறிவிப்பு.
அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாய் தெரிவித்தார்.
அவை, வந்தே சிட்டிங் ரயில், வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர்கள் ஆகியவைதான் அந்த மூன்று வித ரயில்கள் ஆகும். அதில், வந்தே மெட்ரோ 100 கி.மீ வேகத்திலும், வந்தே சிட்டிங் ரயில் 100-500 கி.மீ. வேகத்திலும், வந்தே ஸ்லீப்பர் ரயில் 550 கி.மீ வேகத்திலும் பயணிக்கும் என்று தெரியவந்துள்ளது.
சதாப்திகள், ராஜ்தானிகள் மற்றும் உள்ளூர் ரயில்களுக்குப் பதிலாக தயாரிக்கப்பட்ட இந்த உள்நாட்டு அரை-அதிவேக ரயில்கள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை பாதையின் திறனுக்கு ஏற்ப 130 கிமீ வேகத்தில் இயங்கும்.
மேலும், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு 4ஜி-5ஜி wi-fi சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு வைஷ்ணவ் கூறினார். ரயில்வேயால் 4ஜி-5ஜி டவர்கள் விரைவாக நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார். பல இடங்களில் அவை பொருத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.