அனந்த்நாக்கில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள குல் சோஹாரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தில் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.