மஹாராஷ்டிராவில் நாளை மூன்று கட்சியினர் ஆளுநருடன் சந்திப்பு..!
மஹாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரத்திற்கு மேல் ஆகியும் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெருபான்மையும் இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து தற்போது மஹாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் சிவசேனா ,காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சியினரும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நாளை சிவசேனா ,காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சியினரும் மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.இவர்கள் விவசாயிகள் பிரச்சனை பற்றிய கோரிக்கை மனு அளிப்பதாக கூறி ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ஆட்சியமைப்பது பற்றி ஆலோசனைகள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.