மூணாறு நிலச்சரிவு: கேரள அரசு அரவணைக்கும் – முதல்வர் பினராயி விஜயன்

மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளித்த நிவாரணநிதி முதற்கட்டமானதுதான். மீட்புப்பணி முடிந்ததும் இழப்புகளை மதிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.