அசாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
- குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேறியது.
- அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
மத்திய அரசானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்தது.இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.
ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாது வடகிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக அசாம் ,திரிபுரா,சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.நேற்று கவுகாத்தியில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.