ஆந்திராவில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்துகுடித்த மூவர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் பலருக்கு தற்பொழுது கைகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சாராயம் வாங்க போதுமான பணம் இல்லாததாலும், அதிகப்படியான போதை தேவைப்படுவதாலும் உடலுக்கு ஆபத்து தருவதை போதைக்காக எடுத்துக் கொண்டு உயிரை மாய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் பலர் போதைக்காக தற்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழக்கின்றனர். தற்பொழுது அதுபோல ஆந்திரா மாநிலத்தில் கடப்பா எனும் மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.