ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி – நால்வர் படுகாயம்!
ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு என்னும் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கூறிய அதிகாரிகள், 37 வயதுடைய ராம்துனி மேத்தா அவரது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளார். அதுபோல சத்தர்பூர் தொகுதியிலுள்ள பிகி எனும் கிராமத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் பலத்த மின்னல் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட மின்னலால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது உடல் நிலையும் மிக மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.