பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார்.மேலும்,மே 4 ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக,நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஜெர்மன் பயணம்:
அதன்படி,ஜெமனியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு:
பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் ,இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசாங்க ஆலோசனைகளின் (ஐஜிசி) 6-வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.மேலும்,டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் தனது டென்மார்க் பயணத்தில் அந்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்த பிறகு டென்மார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசுவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்,டென்மார்க் நடத்தும் 2 வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
இமானுவேல் மாக்ரோன்-பிரதமர் மோடி சந்திப்பு:
இறுதியாக,மே 4 ஆம் தேதி பிற்பகல் பிரதமர் இந்தியா திரும்பும் பயணத்தில்,பாரிஸில் சிறிது நேரம் செலவிட்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,இந்தியாவும் பிரான்சும் 75 ஆண்டுகால நட்பு உறவுகளைக் கொண்டாடுகின்றன.மேலும் இந்த மாத தொடக்கத்தில் சமீபத்தில் மீண்டும் பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையேயான மூலோபாய கூட்டாண்மையை(Strategic Partnership) வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…