மதுவிலக்கை அமல்படுத்த தவறிய அதிகாரிகள்.. இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி!
பீகாரில் மதுவிலக்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்த தவறிய அதிகாரிகள் 3 பேரை டிஜிபி ஏ.கே.சிங்கல் இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மதுவிலக்கு உத்தரவை அமல்படுத்த தவறிய மூன்று எஸ்.எச்.ஓக்களை பீகார் மாநில டிஜிபி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்தார். இதற்கு முன், பாட்னாவின் கங்கர்பாக், வைசாலி, கங்கா பாலம், அகியாபிர், முசாபர்பூர் மற்றும் மீனாபூர் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களின் எஸ்.எச்.ஓக்கள், இதே போன்ற குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.