மூன்று வங்கி இணைப்பு : வேலை பறிபோவதால் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு

Default Image

தற்போது இந்த மூன்று வங்கிகளும் இணைத்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி மாறி உள்ளது.

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய இரு வங்கிகளும் பாங்க் ஆஃ ப் பரோடா வங்கியுடன் இணைந்துள்ளது. இந்த மூன்று வங்கிகளும் இணைந்துள்ளதால் பாங்க் ஆஃ ப் பரோடா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 கோடியா உயர்ந்து உள்ளது.

9550, கிளைகளும் , 84, ஊழியர்களுடன் பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி  இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக மாறியுள்ளது. மூன்று வங்கிகளும் இணைந்ததால் ஊழியர்களுக்கும் , வாடிக்கையாளர்களுக்கும்  எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 13400 ஏடிஎம்களும் இயக்க  உள்ளனர்.

இந்த மூன்று வங்கிகளும் இணைவதாக  கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தனர். தற்போது இந்த மூன்று வங்கிகளும் இணைத்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய  வங்கியாக பாங்க் ஆஃ ப் பரோடா வங்கி மாறி உள்ளது.

மேலும் இந்த விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி வாடிக்கையாளர்கள் முன்பு பயன்படுத்திய வங்கி கணக்குகளை பயன்படுத்தலாம்.மேலும் இந்த வங்கி இணைவதால் நடைமுறையில் இரண்டு மதத்திற்கு மட்டும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

பிறகு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என பாங்க் ஆஃ ப் பரோடா தலைவர் பி.எஸ். ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த வங்கி இணைப்பை ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த வங்கிகள்  இணைவதால் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை பறிபோவதாக  ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்