மீண்டும் அச்சுறுத்தல்! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பஞ்சாப் அரசு அறிவிப்பு.
கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்தது காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வகையான நிறுவனங்களும் திறக்கப்பட்டன. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது கொரோனா தொற்று, குறைந்து வந்த கொரோனா பரவல், மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
தமிழகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அபராதம் விதிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது தவிர, முகக்கவசம் அணிவது குறித்து விலக்கு அளிக்கப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பேருந்துகள், ரயில், விமான நிலையம், சினிமா ஹால், ஷாப்பிங் மால், வகுப்பு அறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.