குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அரசியல் அமைப்பு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாள்தான் எதிரிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க தினம். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும். அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேணடும். ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்து விட்டனர்.’ என பேசியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…