கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட 1,700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில், இதுவரை, 3.79 லட்சத்திற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,928 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…