தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு விடுமுறையோ, சலுகையோ கிடையாது – பஞ்சாப் அரசு!

Default Image

தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்கும் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விடுமுறையோ அல்லது தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவோ கொடுக்கப்பட மாட்டாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் வீரியத்தை குறைப்பதற்காக நாடு முழுவதிலும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி குறித்த சில வதந்திகள் பரவி வந்தாலும் அவை அனைத்தும் தவறானது என மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பல இடங்களில் முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மறுக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் தடுப்பூசி மீது அச்சம் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்ப்பதற்காக பஞ்சாப் அரசு தற்போது ஒரு அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்தி கொள்வதற்கான விடுமுறையோ அல்லது மருத்துவ செலவுக்கான உதவியோ கிடைக்காது எனவும், அந்த செலவை நீங்களே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டிய நிலை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் அவர்கள், பஞ்சாபில் யாருக்கும் எந்த மோசமான பக்க விளைவோ அல்லது உயிர் இழப்போ தடுப்பூசியால் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும், 2.6 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 1.82 லட்சம் முன்கள பணியாளர்களும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 79 ஆயிரம் சுகாதார பணியாளர்களும், நான்காயிரம் முன் களப்பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். வதந்திகள் மற்றும் தவறான தகவல்களால் யாரும் பாதிக்கப்படா வேண்டாம் எனவும், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக பாதுகாப்பானது தான் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்