பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, “எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் வளர்ச்சையை உறுதிப்படுத்தியுள்ளோம் விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றி வருவதாகவும், எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…