“லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை” – வாங்கி நிர்வாகி
லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை என வாங்கி நிர்வாகி கூறியுள்ளார்.
தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 90 வருடங்களுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது. ஆனால், இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில், வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இது குறித்து வங்கி நிர்வாகி கூறுகையில், 2020ம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
மேலும், லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை. டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.