கொரோனா பரிசோதனை செய்த 30 நாட்களுக்குள் ஏற்படும் உயிரிழப்பு கொரோனா உயிரிழப்பாகவே கருதப்படும் – மத்திய அரசு!
கொரோனா பரிசோதனை செய்த 30 நாட்களுக்குள் இறந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து செப்டம்பர் 3 ஆம் தேதி கொரோனா குறித்த எண்ணிக்கையை விரிவாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதன்படி கொரோனா நெகடிவ் என பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 25 நாட்களுக்குள் 95 சதவீத இறப்புகள் நிகழ்வதாக ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 30 நாட்களுக்குள் உயிரிழப்பவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நெகடிவ் பரிசோதனைக்குப் பின்பதாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது விபத்து மற்றும் கொலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் தவிர்த்து மருத்துவமனைகளில் வைத்தோ அல்லது வீடுகளில் வைத்தோ உயிரிழக்கக் கூடிய நபர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று தான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.