பிற மாநிலங்களிலிருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் – கர்நாடக அரசு

வேறு மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முகாமில் வைக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 372 அதிகரித்துள்ளது. மேலும் 603 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 9847 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 13,251 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.