கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.! தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

K Chandrasekhar Rao

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை, பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் இன்று அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளன.  அதில் 7 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மாநில தேர்தல் குறித்து கூறிய சந்திரசேகர் ராவ், “வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 95-105 இடங்களை பிஆர்எஸ் கைப்பற்றும் என்றும் அக்டோபர் 16-ம் தேதி வாரங்கலில் எங்களது கட்சி அறிக்கையை வெளியிடுவோம். கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO