#Breaking : இந்த 6 நாடுகளில் இருந்து வந்தால் கொரோனா பரிசோதனை இன்று முதல் கட்டாயம்.!
இன்று முதல் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து அதன் நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளதால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும், அந்த வழியாகவும் வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்து இருந்தது.
அந்த விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனையான RT-PCR சோதனை செய்து அதன் ரிப்போர்ட்டை ஏர் சுவிதா (Air Suvidha) எனும் இணையதள பக்கத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.