ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட அந்த 14 நிபந்தனைகள்….
போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கான் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அந்த ஜாமீன் மீதான நிபந்தனைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சொகுசு கப்பலில் வைத்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆர்யன் கான் 28நாள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தார்.
ஆர்யன் கான் உட்பட தலா 3 பேருக்கு 1 லட்ச ரூபாய் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த தொகைக்கான ஜாமீனை தனி நபரோ அல்லது இரண்டு பேரோ சேர்ந்து அளிக்கலாம். நடிகை ஜூஹீ சாவ்லா இந்த ஜாமீனுக்கு கையெழுத்திட்டு ஆர்யன் கானை ஜாமீனில் வெளியில் கொண்டு வந்துள்ளார்.
அவருக்கு மும்பை நீதிமன்றம், 14 முக்கிய நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. அதனில் குறிப்பிட்ட சில முக்கிய நிபந்தனைகளை கிழே குறிப்பிடபட்டுள்ளது. அவை,
- வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வாங்கி செல்ல வேண்டும்.
- விசாரணை குறித்து எந்தவித ஊடக அறிவிப்பும் வெளியிட கூடாது.
- குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எந்த வித தொடர்பும் வைத்திருக்க கூடாது
- சாட்சியிடம் பேச கூடாது.
- சாட்சியை கலைக்க முயற்சிக்க கூடாது.
- பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வர வேண்டும்.
- அதிகரிகள் அழைக்கும் நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் உட்பட 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஆர்யன் கான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.