Categories: இந்தியா

இனிமேல் இந்த விசா செல்லாது…! இந்தியா அதிரடி நடவடிக்கை…!

Published by
லீனா

சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு,  இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று  தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியாவிற்கு நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ-விசா, வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்வதால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு இணக்கமான  நிலைப்பாட்டினை எடுக்கும்படி இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குறித்து பேசிய பாக்சி, இந்த விவகாரத்தில் சீனா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. சீனாவிற்கு வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து சீன தரப்பில் இதுவரை எந்த ஒரு திட்டவட்டமான பதிலும் அளிக்கவில்லை என தெளிவு படுத்துகிறேன் என்றும், மாணவர்களின் நலனுக்காக சீனா தரப்பை ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

29 mins ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

2 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

3 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

3 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

4 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

5 hours ago