நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என ராகுல் காந்தி பேட்டி.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்ற நிறைவு பெற்றது. இதன்பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம்.
இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம். பாஜகவின் சித்தாந்தம் நாட்டை தாக்கும் நிலையில் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.
NDAக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா போராட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயர். பாஜகவின் சிந்தனைக்கு எதிரான போர் இது. தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போர் இது. இந்தியாவின் மதச்சார்பின்மை மீது பாஜக கூட்டணி அரசு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…