இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல – ராகுல் காந்தி

RAHUL GANDHI

நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என ராகுல் காந்தி பேட்டி.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்ற நிறைவு பெற்றது. இதன்பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம்.

இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம். பாஜகவின் சித்தாந்தம் நாட்டை தாக்கும் நிலையில் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.

NDAக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா போராட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயர். பாஜகவின் சிந்தனைக்கு எதிரான போர் இது. தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போர் இது. இந்தியாவின் மதச்சார்பின்மை மீது பாஜக கூட்டணி அரசு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயானது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்