இந்தியாவுடன் உலகம் எந்தளவுக்கு இணைந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது..! ஒடிசா ரயில் விபத்து குறித்து ஜெய்சங்கர்..

S Jaishankar

இந்தியாவுடன் உலகம் எந்தளவுக்கு இணைந்திருக்கிறது என்பதை ஒடிசா ரயில் விபத்து காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு மூன்று ரயில்கள், பஹானாகா ரயில் நிலையம் அருகே, மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நமீபியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நேற்று தலைநகர் விண்ட்ஹோக் சென்று இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுடன் உலகம் எந்த அளவு இணைந்திருக்கிறது என்பதை ஒடிசா ரயில் விபத்து நமக்கு தெரியப்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிற நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். பிரதமர் மோடிக்கும் நிறைய செய்திகள் வந்துள்ளன. இந்தியாவுடன் உலகம் எந்த அளவு இணைந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த விபத்து நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்