இதை அரசியலாக்கக்கூடாது – ஆளுநர் தமிழிசை பேட்டி
ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது என ஆளுநர் தமிழிசை பேட்டி.
புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் மாபெரும் சுகாதாரத் திருவிழாவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 3 நாட்கள் சுகாதாரத் திருவிழா நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவசமாக முழு உடல் பரிசோதனையை செய்து கொள்வதற்கு இந்த மருத்துவ திருவிழா முக்கிய காரணியாக இருக்கும். ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி ஜிப்மரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு சில உயர் சிகிச்சைகளுக்கு மிகக்குறைந்த அளவிலான கட்டணம் வாங்கப்படுகின்றது; இதை அரசியலாக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.