பள்ளிமாணவி உயிரைப்பறித்த பரோட்டா.! துயர சம்பவம் நமக்கு நினைவூட்டிய சில தீய குறிப்புகள்….
கேரள பள்ளி மாணவி உயிரை பறித்த பரோட்டா குறித்து மருத்துவர்கள் முன்னரே கூறிய சில எச்சரிக்கை செய்திகளும், இந்த செய்தி குறிப்பு விளக்குகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நயன் மரியா எனும் மாணவி அண்மையில் புரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் பரோட்டா பற்றிய ஓர் அச்சத்தை , எச்சரிக்கையை மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. அது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
மைதா அலர்ஜி : மறைந்த அந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு கோதுமை மற்றும் மைதா ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுகளால் உடலில் ஒருவித அலர்ஜி இருந்துள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்பதால், மருத்துவர்கள் கோதுமை மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்குமாறு கூறியுள்ளனர். இதனால் நீண்ட நான் இப்படி கோதுமை , மைதா உணவுகளை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார் அந்த பதினோராம் வகுப்பு மாணவி நயன் மரியா.
உயிரிழந்த மாணவி : சம்பவத்தன்று தனது பெற்றோர்களிடம் ஆசையாய் பரோட்டா வாங்கி சாப்பிட கேட்டுள்ளார். அதன்படி, நீண்ட நாட்கள் ஆனதால், பெற்றோர்களும் பரோட்டா வாங்கி கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டவுடன் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி நயன் மரியா உயிர் பிரிந்துள்ளது.
விருப்பப்பட்டியலில் முதலிடம் : செறி ஊட்டப்பட்ட மைதாவால் தயாரிக்கப்பட்ட புரோட்டா உணவானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் இந்த பரோட்டாவின் ஆதிக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால், அந்த அளவுக்கு பலரது விருப்பப்பட்டியலில் புரோட்டா முதலிடம் வகிக்கிறது.
தோன்றிய வரலாறு : ஆரம்ப காலகட்டத்தில் பண்டைய காலத்தில் கோதுமை மட்டுமே உணவாக இருந்த நிலையில், அதனை மாவாக்கி சமைக்க கற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோதுமை மாவு விரைவில் கெட்டுப்போன காரணத்தால், அதிலிருந்து குறிப்பிட்ட சத்து பகுதியை பிரித்து வெறும் வெள்ளை மாவாக மாற்றி அதனை வியாபாரமாக்க பலர் கற்று கொண்டனர். அதுதான் தற்போது பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்து நிற்கும் மைதா.
ரசாயன கலப்பு : கோதுமையில் உள்ள நல்ல சத்துக்கள் அனைத்தையும் நீக்கி, அதனை வெள்ளையாக மாற்ற பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide) எனும் குறிப்பிட்ட ரசாயனத்தை சேர்த்து, அதன் மூலம் அந்த மாவை வெள்ளையாக மாற்றி தயாரிக்கப்படும் மாவு தான் மைதா.
சர்க்கரை நோய்க்கு வாய்ப்பு : இந்த மைதா உடலில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பரோட்டா என்பது தடை செய்யப்பட்ட உணவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் சிறுவயதில் இருந்து புரோட்டாவை அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு நபருக்கு விரைவில் சர்க்கரை நோய் வரும் அபாயமும் இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும், எண்ணெயில் பொறித்த பரோட்டா என்பது இதய நோயை கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புகளை உண்டாக்கும் எனவும் , உடல் பருமன் ஏற்படுவதற்கும் இந்த புரோட்டாவே முக்கிய காரணம் என்கிறது மருத்துவ ஆய்வு குறிப்புகள்.
செரிமான தொல்லை : பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு வெள்ளையாக மாற்றிய இந்த மைதாவுக்கு நார்சத்து என்பது கிடையாது. ஆதலால் செரிக்கும் திறன் சுத்தமாக கிடையாது. நாமே பலமுறை யோசித்து இருப்போம். புரோட்டா சாப்பிட்டால் காலை கடன் சரியாக கழிக்க முடியாது என்பதை. அதற்கு காரணம், பரோட்டாவில் உள்ள மைதா, உடலில் பசை போல ஒட்டிக் கொள்ளும். செரிப்பதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்ளும். அதன் காரணமாக நமது செரிமான திறன் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.