இது என்னுடைய கடைசி குட் மார்னிங்- காக கூட இருக்கலாம்…! கொரோனா தோற்றால் உயிரிழந்த மருத்துவரின் கடைசி முகநூல் பதிவு…!
இது எனது கடைசி குட் மார்னிங் ஆக கூட இருக்கலாம். இந்த மேடையில் நான் உங்களை இங்கு சந்திக்காமல் இருக்கலாம். அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் இறந்துவிடுகிறது. ஆத்மா இல்லை. ஆத்மா அழியாதது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணமாக்குவதில் மருத்துவர்களின் பங்கு பெரும் பங்காக உள்ளது. இதனால், சில மருத்துவர்கள் தங்களது கடைசி மூச்சி நிற்கும் வரை போராடி வருகின்றனர். அந்த வகையில், மும்பையில் உள்ள, செவ்ரி காசநோய் மருத்துவமனையைச் சேர்ந்த 51 வயதான மூத்த மருத்துவ அதிகாரி மனிஷா யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் இறுதியாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘இது எனது கடைசி குட் மார்னிங் ஆக கூட இருக்கலாம். இந்த மேடையில் நான் உங்களை இங்கு சந்திக்காமல் இருக்கலாம். அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் இறந்துவிடுகிறது. ஆத்மா இல்லை. ஆத்மா அழியாதது.’ என உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.