Categories: இந்தியா

‘இந்த திருமணம் செல்லாது’ – அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!

Published by
லீனா

தன்பாலின ஈர்ப்பு திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்பாலின திருமணத்திற்கு சில நாடுகள்  திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள  நிலையில், பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அலகாபாத்தில் தனது 23 வயது மகளை 22 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக கடத்தி வைத்துள்ளதாக கூறி அஞ்சு தேவி என்ற பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 6ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையின்போது இரண்டு பெண்களும் ஆஜராக வேண்டும் என்று மாநில அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 7 ஆம் தேதி நீதிபதி சேகர் குமார் யாதவின் முன்பு இரண்டு பெண்களும் ஆஜராகினார்.

அந்த இரண்டு பெண்ககளும், நாங்கள் இருவரும் ஒரு மனதோடு தான் திருமணம் செய்து கொண்டோம். இந்து திருமண சட்டப்படி தன்பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு இல்லை. ஆகவே எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என சட்டங்களை எடுத்துக்காட்டி கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாநில அரசு வழக்கறிஞர் கூறுகையில், இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது புனிதமான ஒன்றாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பதுதான் திருமணம். இந்திய நாடு இந்திய கலாச்சாரம் மதங்கள் மற்றும் இந்திய சட்டங்களின் படி இயங்குகிறது. இந்தியாவில் திருமணத்தை புனிதமாக கருதும் நிலையில் திருமணம் நடைபெறும் போது அக்கினியின் முன்பு சத்தியம் பண்ணி எல்லா துன்பத்திலும் இருவரும் ஒன்றிணைந்து இருப்போம் என்று வாக்குறுதி அளித்து தான் திருமணம் செய்வர். ஆனால் மற்ற நாடுகளைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் மட்டும்தான் என கூறியுள்ளார்.

இந்து திருமணச் சட்டம் 1955, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டம் 1969 ஆகியவை ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள நிலையில், இரு பெண்களின் கோரிக்கையை நிராகரித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் என்பது இரண்டு தனிநபர் இணைவது மட்டுமல்ல உயிரியல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இடையிலான ஒரு இணைவு தான்  என்று கூறி தன்பாலின திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் இரு பெண்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள அலகாபாத் நீதிமன்றம் அப்பெண்ணின் தாய் அஞ்சு தேவியின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 minutes ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

21 minutes ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

27 minutes ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago