சமூக வலைதளங்களில் வெளியான இந்த கடிதம் போலியானது – யுஜிசி
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைதளங்களில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது.
கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு முன்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதையடுத்து, தேர்வுகளும் நேரடி தேர்வு முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைதளங்களில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று யுஜிசி அனுப்பியதாக சமூகவலைத்தளங்களில் கடிதம் ஒன்று உலா வந்தது. இந்த கடிதம் கடிதம் போலியானது என தற்போது யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Clarification regarding Fake Public Notice pic.twitter.com/6iLFDBEV8I
— UGC INDIA (@ugc_india) December 13, 2021