977 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இப்படி தான் இருக்கும்.! வைரல் புகைப்படங்கள் இதோ…

Default Image

புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்களை அரசு வெளியிட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் உள்புற அமைப்பை காட்டும் புகைப்படங்களை அரசு வெளியிட்டுள்ளது. 1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருவதால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டிடக் கலைஞர் பிமல் படேல் தலைமையிலான அகமதாபாத்தைச் சேர்ந்த HCP நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்று ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றத்தை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மதிப்பீட்டையும் தாண்டி செலவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 1,200 பேருக்கு மேல் அமரும் வசதியுடன் இருக்கும். கட்டிடத்தில் சட்டமன்றத்திற்கான பெரிய அறைகள் இருக்கும்.

மேலும் இதில் 800க்கும் மேற்பட்ட இருக்கைகள் வரை கொண்ட ஒரு பெரிய லோக்சபா ஹால் மற்றும் 384 இருக்கைகள் வரை கொண்ட ஒரு பெரிய ராஜ்யசபா மண்டபம் உள்ளது. புதிய கட்டிடத்தில் ஆடியோ காட்சி அமைப்புகளுடன் கூடிய பெரிய கமிட்டி அறைகளும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் அவர்கள் சுதந்திரமாகவும் சுற்றி வரும் வகையிலும் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்