கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க உதவியது இது தான் – ஐசிஎம்ஆர்
கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உதவியது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.எனவே கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில்,அதிக மக்கள் தொகைக்கொண்ட நாடு இந்தியா.இங்கு கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை.மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவுதான். கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உதவியது.ஊரடங்கு உத்தரவு நல்ல பலன் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.