அம்பானி வீட்டு கல்யாணம் : சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் அட்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அதன் விலை தொடர்பான ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூலை 12ம் தேதி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளும் தொடங்கியுள்ளன, இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு யார் யார் வருகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
வருகின்ற ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற உள்ள திருமணத்திற்கு இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அம்பானி தனிப்பட்ட முறையில் பல அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்களை அழைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அட்டையின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது அந்த திருமண அழைப்பிதழ் அட்டையின் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆனால், ஒரு அழைப்பிதழின் விலை எவ்வளவு தெரியுமா? விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க…
விலை உயர்ந்த அழைப்பிதழ் :
அழைப்பிதழ் ஒரு பெரிய ஆரஞ்சு பெட்டிக்குள் உள்ளது. உள்ளே, இதயத்தில் லட்சுமி தேவியுடன் கூடிய விஷ்ணுவின் உருவமும், பெட்டியின் மேல் அதைச் சுற்றி விஷ்ணு ஸ்லோகமும் எழுதப்பட்டுள்ளது. பெட்டிக்குள் இருக்கும் எம்பிராய்டரி, விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் இல்லமான வைகுண்டத்தைக் காட்டுகிறது.
பின்னர், கடைசிப் பக்கம் தியாஸுடன் ஒளிரும் மற்றும் ரிக் வேதத்தின் மொழிகள்உள்ளது, முக்கிய அழைப்பிதழ் தவிர, அழகான பயண மந்திர் அடங்கிய சிறிய ஆரஞ்சு பெட்டியும் உள்ளது. இந்த பெட்டியில் காஷ்மீர் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையிலான பஷ்மினா சால்வையும் உள்ளது.
இவ்வாறு, இது ஒரு திருமண அழைப்பிதழா? மினி கோவிலா? என்கிற வியப்பில் பார்க்க கூடிய அளவிற்கு பிரமாண்டமாக உள்ளது. ஒரு தகவலின்படி, இப்படிப்பட்ட பிரம்மாண்ட திருமண அழைப்பிதழின் விலையானது ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவில் வாழும் சராசரி மனிதனின் ஆண்டு சம்பளத்தை ஒப்பிட்டு பார்த்துள்ளது Forbes இதழ்.
அது மட்டும் இல்லங்க… இந்த திருமண அழைப்பிதழ் விலையானது, முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண அழைப்பிதழை விட366 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆகாஷ் அம்பானியின் அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சம் ஆகும். அதே சமயம் இது, இஷா அம்பானியின் திருமண அட்டையை விட 2.3 மடங்கு விலை அதிகம் என்று சொல்லப்படுகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…