இது மிகவும் எரிச்சலூட்டுகிறது.. பில்கிஸ் பானு வழக்கில் தலைமை நீதிபதி காட்டம்!
ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம் என பில்கிஸ் பானு வழக்கில் தலைமை நீதிபதி காட்டம்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பில்கிஸ் பானு வழக்கில் வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், தன் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிய சமர்ப்பிப்புகளை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனு பட்டியலிடப்படும் என்று பில்கிஸ் பானுவின் வழக்கறிஞரிடம் உறுதியளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், தயவுசெய்து, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம். இது மிகவும் எரிச்சலூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.