அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை என ராகுல் காந்தி பேட்டி.
டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சியை 12 எம்.பி-க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று இந்த செயலை கண்டித்து ராகுல் காந்தி மற்றும் பல தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு அடையாளமாகும். எம்பிக்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை ஆகும் என்றும், பிரதமர் மோடி அவைகளுக்கு வருவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…