பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் மாநிலம் இதுதான்..!
உலக அளவில் கல்வித்துறையில் பொருத்தவரை அதிகமானவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு துறையை மட்டுமே தேர்வு செய்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பொறியாளர்கள் அதிகம் வேலை பெறும் மாநிலங்களில் மேற்கு வங்காளம் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த கவுன்சில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி 2008- 2019 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 791 பொறியியல் பட்டதாரிகள் வெளியேறினர். அதில் 27 ஆயிரத்து 675 பட்டதாரிகளுக்கு அதாவது 51.45 சதவீதம் பேர் வேலை கிடைத்துள்ளது .
இந்த மாநிலத்தில் வருட வருடம் பொறியியல் பட்டதாரிகளின் வேலை கிடைக்கும் சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2016-2017 ஆண்டு 43.3% பேருக்கும் , 2017-2018 ஆண்டுகளில் 48.46 % பேருக்கும் வேலை கிடைத்து உள்ளது.
மேலும் உத்திரபிரதேசம், குஜராத் ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாணவர்கள் அதிகமாக சேருகின்றனர். ஆனால் குறைந்த சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் சில மேற்கு வங்காளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.