இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலை.! எம்பி கருத்துக்கு பாஜக கடும் விமர்சனம்.!
இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலை என அக்கட்சி எம்பி கூறிய கருத்துக்கு மே.வங்க பாஜக மாநில தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு, அக்கட்சி எம்பி நுஸ்ரத் ஜஹான் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை கண்டால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மூங்கில் குச்சியால் அடித்து விரட்டுவார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்தை தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், நஸ்ரத்தின் கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும், யாராக இருந்தாலும் சரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும்போது அவர்கள் குண்டர்களாக (ரவுடிகளாக) மாறு விடுகின்றனர் என்பதையே நஸ்ரத்தின் கருத்து காட்டுகிறது என சுகந்தா மஜும்தார் விமர்சித்து உள்ளார்.